Theme Check

தேர்தல் தேதியில் மாற்றம்! அதிரடி அறிவிப்பு!!

தேர்தல் தேதியில் மாற்றம்! அதிரடி அறிவிப்பு!!

தேர்தல் தேதியில் மாற்றம்! அதிரடி அறிவிப்பு!!
X

மணிப்பூர் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரின் சட்டமன்ற பதவிக்காலம் அடுத்த மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ec

அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதிக்கு பதில் மார்ச் 5ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் திட்டமிட்டபடி மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

newstm.in

Next Story
Share it