Theme Check

தேர்தல் தோல்வி.. காங்கிரஸ்-க்கு புதிய தலைவரா? - சோனியா காந்தி முக்கிய ஆலோசனை !!

தேர்தல் தோல்வி.. காங்கிரஸ்-க்கு புதிய தலைவரா? - சோனியா காந்தி முக்கிய ஆலோசனை !!

தேர்தல் தோல்வி.. காங்கிரஸ்-க்கு புதிய தலைவரா? - சோனியா காந்தி முக்கிய ஆலோசனை !!
X

5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், சோனியா காந்தி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. அதோடு மட்டுமல்லாமல், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் மாநில கட்சியாக மாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பஞ்சாப், கோவாவில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கட்சியினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், அக்கட்சி அடைந்த பெரும் தோல்வி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பலரும் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் சோனியா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

congress

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு சோனியா காந்தி தலைமையில் கூட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார். அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது.

5 மாநில தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக கடினமாக உழைத்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், செயல்வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தோல்விகளில் இருந்து பாடம் பெறுவோம். இந்திய மக்களின் நலனுக்கான காங்கிரசின் பணிகள் தொடரும். என்று கூறியுள்ளார்.

பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ், மற்ற மாநிலங்களிலும் வாக்குகளைப் பெற தவறி விட்டது. 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it