Theme Check

தேர்தல் சுவாரஸ்யம்.. திமுக, அதிமுக வேட்பாளர்களின் டெபாஷிட்டை காலிசெய்த மாணவி

தேர்தல் சுவாரஸ்யம்.. திமுக, அதிமுக வேட்பாளர்களின் டெபாஷிட்டை காலிசெய்த மாணவி

தேர்தல் சுவாரஸ்யம்.. திமுக, அதிமுக வேட்பாளர்களின் டெபாஷிட்டை காலிசெய்த மாணவி
X

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இளம்பெண்கள் பலரும் வெற்றி பெற்று மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5ஆவது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய 22 வயது பொறியியல் பட்டதாரி சினேகா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இந்த வார்டில் ஆயிரத்து 57 வாக்குகள் பதிவான நிலையில், பொறியியல் பட்டதாரியான சினேகா என்பவர் 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது.

sneha

அதாவது, இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் டெபாஷிட் இழந்துள்ளனர். திமுக, அதிமுக, பாகஜ, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்து, டெபாஷிட் இழந்துள்ளனர். அமமுக வேட்பாளர் மட்டும் டெபாஷிட் பெற்றுள்ளார். இதனால் இளம் வெற்றி வேட்பாளர் சினேகா தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டையும் வாழ்த்தையும் கூறி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it