தேர்தலில் குளறுபடி.. பூத்தில் மொத்த வாக்காளர்கள் 90.. பதிவான வாக்குகள் 181 !!
தேர்தலில் குளறுபடி.. பூத்தில் மொத்த வாக்காளர்கள் 90.. பதிவான வாக்குகள் 181 !!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் மூன்று கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அசாம், மேற்கு வங்கத்தில் இன்று 3ஆம் கட்டவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அசாமில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள Haflong தொகுதியில் 2ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் வெறும் 90 பேர் மட்டுமே, ஆனால் அந்த பூத்தில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனை வாக்கு மையத்தின் தலைமை அதிகாரி மற்றும் முதல் வாக்கு அதிகாரி ஆகியோர் ஒத்துக்கொண்டனர்.
இந்த குளறுபடியை கண்டறிந்த தேர்தல் ஆணையம், அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் 6 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. மேலும் அந்த பூத்தில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டறியப்பட்டதால் அந்த குறிப்பிட்ட பூத்களில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பூத்தில் மறு வாக்குப்பதிவுக்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in

