80 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குட்டிகளை ஈன்ற யானை.. வைரல் வீடியோ !!
80 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குட்டிகளை ஈன்ற யானை.. வைரல் வீடியோ !!

இலங்கையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.
பின்னவல யானைகள் காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சுரங்கி என்ற யானை இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, காப்பகத்தில், 25 வயதான சுரங்கி என்ற யானை, இரட்டை ஆண் யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்கு முன்னதாக, இலங்கையில் 1914 ஆம் ஆண்டில் தான் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சுரங்கி யானை மற்றும் குட்டி யானைகள் ஆகியன ஆரோக்கியமாக உள்ளதாக சரணாலயத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1996 ஆம் ஆண்டு திருகோணமலை – சுரங்கல்கம பகுதியில் பிறந்த குறித்த யானை, 1997 ஆம் ஆண்டு பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு கனக்க எனும் யானை குட்டியை ஈன்றது.
newstm.in

