Theme Check

அதிகாரிகள் அதிர்ச்சி..!! பூட்டிக்கிடந்த சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் உடல்..!!

அதிகாரிகள் அதிர்ச்சி..!! பூட்டிக்கிடந்த சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் உடல்..!!

அதிகாரிகள் அதிர்ச்சி..!! பூட்டிக்கிடந்த சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் உடல்..!!
X

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று, வாக்குச்சாவடி அமைப்பதற்காக வால்பாறை அருகில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் பயன்பாட்டில் இல்லாத சத்துணவு கட்டடத்தை நகராட்சி அதிகாரிகள் திறந்துள்ளனர்.

அப்போது, சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் உடல் சிதிலமடைந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த சத்துணவு கூடத்தின் பின் பகுதியில் பெரிய ஓட்டை இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர், யானையின் எலும்புக் கூடுகளை மீட்டனர். பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் இந்த சத்துணவு மையத்தில் குட்டியானை ஓட்டை வழியாக உள்ளே புகுந்து பின்னர் வெளியேற முடியாமல் இறந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

யானை இறந்து பல மாதங்கள் ஆகியிருக்கக் கூடும் எனவும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். குட்டி யானையின் எலும்புக் கூடுகளை மீட்ட வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it