Theme Check

ட்விட்டர் நிறுவனத்தை அலறவிடும் எலான் மஸ்க்!!

ட்விட்டர் நிறுவனத்தை அலறவிடும் எலான் மஸ்க்!!

ட்விட்டர் நிறுவனத்தை அலறவிடும் எலான் மஸ்க்!!
X

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக எலான் மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து 44 ஆயிரம் கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை தானே வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது போலி கணக்குகளை கொடுக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Twitter elon

இதுதொடர்பாக மஸ்க், ட்விட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை முழுமையாக வழங்கத் தவறினால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒப்பந்தம் மற்றும் கடமைகளை மீறுவது போல் இருப்பதாகவும், இணைப்பு ஒப்பந்தத்தை முறித்து கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் தன்னிடம் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

elon-musk

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்ததில் இருந்தே ட்விட்டரில் வார்த்தை போர் வெடித்து வருகிறது. ட்விட்டர் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு, எடிட் பட்டன், ப்ளூ டிக் என அடுத்தடுத்து எலான் மஸ்க் பல சர்ச்சைகளை கிளப்பி வந்தார்.

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். தற்போது போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it