Theme Check

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்..!!இனி பணிச்சுமை அதிகரிக்கும்..!!

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்..!!இனி பணிச்சுமை அதிகரிக்கும்..!!

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்..!!இனி பணிச்சுமை அதிகரிக்கும்..!!
X

எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார். அதை தொடர்ந்து அவர் தனது டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார்.


ஒப்பந்தம் தொகையை முழுமையாக செலுத்திய பின்னர் அவர் ட்விட்டர் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்வார் என தெரிகிறது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை கையப்படுத்திய பிறகு நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கவுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இனி ட்விட்டர் நிறுவனம் ஹார்ட்கோர் மென்பொருள் பொறியியல், வடிவமைப்பு, இன்ஃபோசெக் மற்றும் சர்வர் ஹார்டுவேர் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும். தொழில்நுட்ப துறையில் உள்ள அனைத்து மேலாளர்களும் தொழில்நுட்ப ரீதியாக சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நிறுவனத்தை வெற்றியடையச் செய்ய ஊழியர்களை இன்னும் கடினமாக உழைக்க செய்வேன் என்றும் பணி நெறிமுறை எதிர்பார்ப்புகள் தீவிரமானதாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்கின் இந்த ட்விட்டர் பதிவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story
Share it