Theme Check

நடு வானில் எஞ்சின் கோளாறு! 179 பேர் உயிர் தப்பினர்!

நடு வானில் எஞ்சின் கோளாறு! 179 பேர் உயிர் தப்பினர்!

நடு வானில் எஞ்சின் கோளாறு! 179 பேர் உயிர் தப்பினர்!
X

சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு 172 பயணிகள், 7 விமான ஊழியர்களுடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு எஞ்சினில் பழுது ஏற்பட்டது.

இதனையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க கோரினார். இதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.

சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. விமானி சமர்த்தியமாக செயல்பட்டதால் விமானத்தில் பயணம் செய்த 179 பேரும் அதுஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அதனைத் தொடர்ந்து விமானிகள் வேறு விமானம் மூலமாக துபாய் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:
Next Story
Share it