Theme Check

டீ கடை வைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியாளர்கள்!!

டீ கடை வைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியாளர்கள்!!

டீ கடை வைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியாளர்கள்!!
X

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வந்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

வெப்படை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பள்ளிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

arrest

அதில், தனியாக செல்லும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்தது ராஜூ, அருண் என்ற இளைஞர்கள் என தெரியவந்தது. பொறியியல் பட்டதாரிகளான இருவரும் பெரிய அளவில் டீ கடை வைக்க வேண்டும் என்பதற்காகவே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாருக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it