Theme Check

நங்கூரமாய் நின்ற கோலி- புஜாரா ஜோடி- போராடிய இங்கிலாந்து பவுலர்கள் ! 3ஆம் நாளில் இந்தியா ரன் குவிப்பு !

நங்கூரமாய் நின்ற கோலி- புஜாரா ஜோடி- போராடிய இங்கிலாந்து பவுலர்கள் ! 3ஆம் நாளில் இந்தியா ரன் குவிப்பு !

நங்கூரமாய் நின்ற கோலி- புஜாரா ஜோடி- போராடிய இங்கிலாந்து பவுலர்கள் ! 3ஆம் நாளில் இந்தியா ரன் குவிப்பு !
X

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி ரன் குவித்தது. பர்ன்ஸ், ஹமீது, மலான் ஆகியோர் அரைசம் அடித்தனர். கேப்டன் ஜோ ரூட் சதமடிக்க 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது.

india test cricket

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து 432 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடர்ந்தது. அணியின் ரன் 34 ஆக இருக்கும்போது கே.எல்.ராகுல் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா ரோகித்துடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித்-புஜாரா ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. அரை சதம் கடந்த ரோகித் 59 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். அதேநேரத்தில் ரன் சேர்ப்பதிலும் கவனம் செலுத்தினர். அவர்களை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடியும் அவை தோல்வியில் தான் முடிந்தது.

india test cricket

மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 91 ரன்னுடனும், விராட் கோலி 45 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஓவர்டோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

newstm.in

Tags:
Next Story
Share it