இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்பு.. காரணம் இது தான் !!
இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்பு.. காரணம் இது தான் !!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து சென்னை டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதாவது, உலக போரில் பங்கேற்க கேப்டன் சர் டாம் மூரே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.

100 வயதான சர் டாம் மூரே சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பால் இங்கிலாந்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
Tags:
Next Story

