Theme Check

பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி.. புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு..!

பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி.. புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு..!

பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி.. புதிதாக 20 மகளிர் காவல் நிலையங்கள் திறப்பு..!
X

தமிழக காவல்துறை சார்பில் புதிதாக 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, இன்று திறந்து வைத்தார்.
New 20 All Women Police Stations: Opened by First Minister MK Stalin | புதிதாக  20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து  வைத்தார்
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1973-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன் முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர்.

சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர். தற்போது, மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-2022-ம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் - சேலையூர், ஆவடி மாநகரம் - எஸ்ஆர்எம்சி, தாம்பரம் மாநகரம் - வண்டலூர், வேலூர் மாவட்டம் - காட்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை ஊரகம், கடலூர் மாவட்டம் - திட்டக்குடி, கரூர் மாவட்டம் - கரூர் ஊரகம், புதுக்கோட்டை மாவட்டம் - கோட்டைப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் - பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் - ஊமச்சிகுளம், திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஊரகம், தேனி மாவட்டம் - பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர், திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் - புளியங்குடி ஆகிய 20 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it