Theme Check

தேல்வி பயத்தால் திமுக கள்ள ஓட்டுப்போட முயற்சி - வீடியோ காட்சிகளை வெளியிட்ட இபிஎஸ்!

தேல்வி பயத்தால் திமுக கள்ள ஓட்டுப்போட முயற்சி - வீடியோ காட்சிகளை வெளியிட்ட இபிஎஸ்!

தேல்வி பயத்தால் திமுக கள்ள ஓட்டுப்போட முயற்சி - வீடியோ காட்சிகளை வெளியிட்ட இபிஎஸ்!
X

சேலம் மாவட்டம் ஓமலூாில் அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளுடன் எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளா்களிடம் பேசிய அவர்,

நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் திமுகவினா் தேல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளனா். மேலும் திமுகவினா் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை கூட காவல்துறையினா் தடுத்து நிறுத்தவில்லை எனவும் திமுக வேட்பாளரின் கணவர் ஒருவர் போலீசாரை மிரட்டும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் பொதுமக்கள், அச்சமின்றி வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினா்.

மேலும், இது போன்ற தேர்தல் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Next Story
Share it