Theme Check

தேர்தல் குறித்து ஈபிஎஸ் எடுத்த ஸ்பெஷல் சர்வே!!

தேர்தல் குறித்து ஈபிஎஸ் எடுத்த ஸ்பெஷல் சர்வே!!

தேர்தல் குறித்து ஈபிஎஸ் எடுத்த ஸ்பெஷல் சர்வே!!
X

.தி.மு..வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு வசப்படும் என்று தனி டீமை வைத்து தமிழகம் முழுவதும் சர்வே நடத்தியுள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிதி உதவி திட்டம் செயல்படுத்தாமல் இருப்பது, தைப்பொங்கலுக்கு நிதி தரவில்லை என்ற இரண்டை வைத்து அதிமுக வாக்கு சேகரிக்க நினைக்கிறது.

இதனை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மக்கள் அளித்த பதில்கள் அதிமுகவுக்கு அத்தனை சாதகமானதாக இல்லை என தெரிகிறது.

eps stalin

அதாவது திமுக மீது மக்கள்வெறுப்பில் இருப்பார்கள் என அதிமுக மனக்கணக்கு போட்ட நிலையில், மக்களோ முழு வெறுப்பு, முழு ஆதரவு என்று இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது மக்கள், அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றிருக்கிறது என்று நினைக்கிறார்கள் என்ற பதிலும் கிடைத்துள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்துக்கான நிதிக்கு முதல்வர் எங்கே போவார் என்று கேட்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

mk-stalin 1

இதனையடுத்து அதிருப்தியாளர்களின் சதவீதத்தை பிரசாரத்தின் மூலம் அதிகப்படுத்தும் முடிவை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வே குறித்து அறிந்த திமுக, நிதி ஆதாரங்களை .தி.மு.. அரசு சிதைத்துவிட்டு சென்ற காரணத்தாலேயே உடனடியாக சில திட்டங்களை துவக்க முடியவில்லை.

மக்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும், விரைவில் உங்களுக்கு சர்ப்பரைஸ் தருகிறோம் என்று பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறது.

newstm.in

Next Story
Share it