Theme Check

மனைவியின் சீதனங்களுடன் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்.. அரசு டாக்டரை அள்ளியது போலீஸ்..!

மனைவியின் சீதனங்களுடன் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்.. அரசு டாக்டரை அள்ளியது போலீஸ்..!

மனைவியின் சீதனங்களுடன் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்.. அரசு டாக்டரை அள்ளியது போலீஸ்..!
X

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் அடுத்த கே.கே.நகரை சேர்ந்த தர்மராஜ் மகள் திவ்யா சரோனா (35). இவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விளாங்குடி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சம்பத் மகன் அனுப் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

அனுப், மார்த்தாண்டம் எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், திருமணத்தின் போது திவ்யா சரோனாவின் பெற்றோர் 117 சரவன் நகை மற்றும் ரூ.32 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இதை பெற்றுக்கொண்ட அனுப்பின் தந்தை சம்பத், அதை தனது வங்கி லாக்கரில் வைத்துள்ளார். இந்த நிலையில் அனுப் மேலும் 10 லட்சம் ரூபாயை வாங்கி வரும்படி திவ்யாவை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து அனுப்பிற்கு வேறொரு பெண் மருத்துவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மனைவி கொண்டு வந்த சீதனங்களுடன் கள்ளக்காதலியுடன் ஓட்டம் : அரசு மருத்துவர்  அதிரடி கைது!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking  News Online | Latest Update News
இதையடுத்து, திவ்யா சரோனா வழங்கிய 117 சவரன் நகை மற்றும் ரூ.32 லட்சத்தை வங்கி லாக்கரில் எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

இது குறித்து திவ்யா ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த திவ்யா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அனுப் மீது வரதட்சணை கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Next Story
Share it