Theme Check

திடீரென தீப்பிடித்து எரிந்த இ-ஸ்கூட்டர் : ஓலா நிறுவனம் விசாரணை!!

திடீரென தீப்பிடித்து எரிந்த இ-ஸ்கூட்டர் : ஓலா நிறுவனம் விசாரணை!!

திடீரென தீப்பிடித்து எரிந்த இ-ஸ்கூட்டர் : ஓலா நிறுவனம் விசாரணை!!
X

புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

தற்போது இ-ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை பார்த்து அச்சம் கொள்ளும் மக்கள் இ-ஸ்கூட்டரை நாடுகின்றனர். ஆனால் புனேவில் இ-ஸ்கூட்டர் திடீரென பற்றி எரிந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் சாலையோரத்தில் ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீ பற்றியது.


ஸ்கூட்டர் பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓலாவின் S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.


இதையடுத்து ஓலா நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தங்களது பார்வைக்கு விபத்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புனேவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கி உள்ளோம்.

scooter

இதற்கான காரணத்தை அறிய முயற்சித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர் பாதுகாப்பாக உள்ளார் என ஓலா தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it