Theme Check

யூரோ கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி.. ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி !

யூரோ கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி.. ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி !

யூரோ கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி.. ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி !
X

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் 16ஆவது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு மாதக்காலமாக நடைபெறும் இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. லீக் போட்டிகள், சுற்று 16, காலிறுதி போட்டிகள் முடிந்து தற்போது அரையுறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள இத்தாலி, 6ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே போட்டி என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் போன்று இருக்கும். ஆனால் அவ்விரு அணிகளுக்கு இடையேயான பிரச்னை வேறு.

போட்டி தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இதனையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரு அணி வீரர்களும் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பந்தை வலைக்குள் தள்ளினர். இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.

இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது. இதனை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 2ஆவது அரையுறுதி போட்டியில் இங்கிலாந்து- டென்மாக் அணிகள் மோத உள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it