எல்லாம் காதலுக்காக.. மகோவிற்கு இளவரசியாக கடைசி பிறந்தநாள் இன்று !!
எல்லாம் காதலுக்காக.. மகோவிற்கு இளவரசியாக கடைசி பிறந்தநாள் இன்று !!

காதலுக்காக தனது அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி மகோ, இளவரசியாக தன்னுடைய கடைசி பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.
ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமாக மகோ உள்ளார். இவர், கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை இளைஞரை காதலித்தார். அதன்படி தனது காதலனையே திருமணம் செய்துகொண்டு வாழப்போவதாக அதிரடியாக அறிவித்தார்.

இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும் என்பது விதி. எனினும் தனது காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தை துறந்ததார். அதோடுமட்டுமல்லாமல், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரயைும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) தனக்கு வேண்டாம் என மகோ நிராகரித்தார்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நவம்பரில் தங்களின் திருமணம் நடைபெறும் என மகோ- கீ கோமுரோ ஜோடி அறிவித்தது. ஆனால், கீ கோமுரோவின் தாயின் கடன் பிரச்சினையால் இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கீ கோமுரோ தனது சட்டப்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மகோ-கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26ஆம் தேதி தேதி நடைபெற இருக்கிறது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் இன்று மகோ தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இது காதலுக்காக தனது அரச பட்டத்தை துறந்த மகோ, இளவரசியாக கொண்டாடிய கடைசி பிறந்தநாள் ஆகும்.

இதனையொட்டி அவருக்கு அந்நாட்டின் மக்கள் சமூக வலைதளங்களிலும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
newstm.in

