Theme Check

பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரங்கள்.. டிரைவர் ஓட்டம்.. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி !

பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரங்கள்.. டிரைவர் ஓட்டம்.. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி !

பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரங்கள்.. டிரைவர் ஓட்டம்.. அரசியல் கட்சிகள் அதிர்ச்சி !
X

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்குவங்கம், அசாமில் இரண்டுகட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அசாமில் பாஜக எம்எல்ஏ ஒருவருடைய வாகனத்தில் இருந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. கார் ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பல இருப்பது சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கார் பதிவு எண் AS 10B 0022 இந்தக் கார், பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவருடையது என்பதும் தெரியவந்தது. அசாம் பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கதில் பதிவிட அது வைரலாகப் பரவியது, தீயாக பரபரப்பு ஏற்படுத்தியது.

காரில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பது குறித்து உள்ளூர்வாசிகள் என்னவென்று கேட்ட போது டிரைவர் ஓட்டம்பிடித்தார். அப்போது அப்படி என்னதான் காரில் இருக்கிறது என்று அவர்கள் தேடிய போது ஈவிஎம் எந்திரங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

இதனை வீடியோவாக பத்திரிகையாளர் அதானு புயன் பதிவிட்டார். ஈவிஎம்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது எப்படி ? தேர்தல் நேரத்தில்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியது. இதனையடுத்து 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் மாநிலங்களில் ஈவிஎம்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியேதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இந்த வைரல் வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இனியாவது விழிப்பாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it