தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.. எதிர்பார்ப்பில் மாணவர்கள் !
தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.. எதிர்பார்ப்பில் மாணவர்கள் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் முறையாக கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகளும் வெளியிடப்பட்டன. எனினும் இதில் மறுகூட்டல் தேவைப்படும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஏராளமானோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு துணை தேர்வில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் இன்று மதியம் இரண்டு மணிக்கு வெளியிடப்பட உள்ளது. www.dge.tn.gov.in என்ற இளையதள பக்கத்தில் முடிவுகளை தெரிந்துகொண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள பக்கத்தில் தேர்வு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

