5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு கட்டணம் அறிவிப்பு!!
தனியார் சுயநிதிபள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முறையே 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாயும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 ரூபாயும் தேர்வு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது, இந்த பொது தேர்வுகளை மாணவர்கள் அவர்கள் தற்போது படித்து வரும் பள்ளிகளிலேயே எழுதலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொது தேர்வுக்கான ஏற்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முறையே 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாயும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 ரூபாயும் தேர்வு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
newstm.in
Tags:
Next Story

