முன்னாள் காதலனின் ஆபாச மிரட்டல்.. திருமணமான 12 நாளில் இளம்பெண் தற்கொலை!!
முன்னாள் காதலனின் ஆபாச மிரட்டல்.. திருமணமான 12 நாளில் இளம்பெண் தற்கொலை!!

புகைப்படங்களை வெளியிடுவேன் என முன்னாள் காதலன் மிரட்டியதால் திருமணமான 12 நாட்களில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து என்பவர், சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கும், திருச்செந்தூரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 14ஆம் தேதிதான் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து விருந்து நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு இருவரும் சென்னீர்குப்பம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் புதுப்பொண்ணான சரஸ்வதி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த முத்து, வீட்டிற்கு திரும்பியபோது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், திருமணத்திற்கு முன்பு சரஸ்வதி, வேறு ஒருவரை காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடப் போவதாக அந்த இளைஞர் மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. திருமணம் முடிந்த அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் இருந்தே தொலைப்பேசி வாயிலாக முன்னாள் காதலன் மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சரஸ்வதியை மிரட்டிய இளைஞரை தேடி வருகின்றனர். முன்னாள் காதலனின் செயலால் புதிதாக திருமணமான இளம்பெண் உயிரிழந்த சம்பவம் உறவிர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in


