மெரினா கடற்கரையில் அத்துமீறிய காதல் ஜோடி.. மண்டையை உடைத்த கும்பல் !!
மெரினா கடற்கரையில் அத்துமீறிய காதல் ஜோடி.. மண்டையை உடைத்த கும்பல் !!

மெரினா கடற்கரையில் அத்துமீறிய காதல் ஜோடியால் இருவரின் மண்டை உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையில், வழக்கறிஞர்கள் சிலர் துரித உணவகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கடற்கரையில், ஒரு காதல் ஜோடி தகாத முறையில் அத்துமீறியசெயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த வழக்கறிஞர்கள், சுற்றுலாப் பயணிகளும், பெண்கள், குழந்தைகள் வரும் இடத்தில் இப்படி நடந்துகொள்ளலாமா என அந்த காதல் ஜோடி தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தனது காதலி முன்பே அசிங்கப்படுத்தியதாக கருதிய இளைஞர், தனது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் நான்கு பேர், வழக்கறிஞர்களை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.
இதில், பாடியை சேர்ந்த வழக்கறிஞர் நாகராஜ் மற்றும் ராயபுரத்தை சேர்ந்த பிரதீப் இருவரின் மண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளையும் காதல்ஜோடியையும் தேடி வருகின்றனர்
newstm.in

