Theme Check

பரபரப்பு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இல்லாமல் வெளியான அதிமுக கடிதம்!!

பரபரப்பு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இல்லாமல் வெளியான அதிமுக கடிதம்!!

பரபரப்பு! ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர் இல்லாமல் வெளியான அதிமுக கடிதம்!!
X

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் பெயர்கள் இல்லாத கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 – திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில்லாமல் தலைமைக்கழகம் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

admk letter

முன்னதாக ஒற்றதை தலைமை விவகாரத்தில் எழுந்துள்ள உட்கட்சி மோதலை தொடர்ந்து, மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து .பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது.

ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களை .பன்னீர்செல்வம் சந்திப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் அவர் சென்னைக்கு திரும்ப உள்ளார். இன்று மதியம் மதுரையில் இருந்து விமான மார்க்கமாக சென்னைக்கு .பி.எஸ் பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Next Story
Share it