பரபரப்பு! பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வெடிகுண்டுகள்!!
பரபரப்பு! பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வெடிகுண்டுகள்!!

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் ஏறியதில் வெடித்துச் சிதறியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தெற்கு கோட்டையூர் பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியின் பின்புறம் மக்கள் நடமாட்டம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் சக்கரம் ஏறியபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பெரும் சத்தம் கேட்டடுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், வெடிகுண்டு வெடித்த இடத்தின் அருகிலேயே மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மேலும் ஏதேனும் குண்டு உள்ளதா என விசாரணை நடத்தினர்.
newstm.in

