பரபரப்பு! வெடித்து சிதறிய புத்தம் புது புல்லட் பைக்!!
பரபரப்பு! வெடித்து சிதறிய புத்தம் புது புல்லட் பைக்!!

பூஜை போடும் நேரத்தில் புத்தம் புதிய புல்லட் பைக்கின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உகாதி பண்டிகைக்காக புதிதாக வாங்கிய புல்லட் வண்டிக்கு பூஜை போட மைசூரில் இருந்து ஆந்திராவுக்கு ரவிச்சந்திரா என்ற இளைஞர் வந்தார். கோவிலை வந்தடைந்த போது வண்டியில் வித்தியாசமாக ஒலி வந்ததை கேட்டு ஓரம் கட்டினார்.
அப்போது திடீரென, புல்லட் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியது. கசாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேராக ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருக்கிறார்.

இருசக்கர வாகனத்தில் இருந்து முதலில் புகை கிளம்பியிருக்கிறது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ரவிச்சந்திராவின் புல்லட் வண்டியின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் வண்டியின் பாகங்கள் தீப்பிடித்து சிதறியது.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த மக்கள் வீடியோவாக எடுத்தனர். இதனிடையே, கூட்டத்தில் இருந்த சிலர் புல்லட்டில் பற்றிய தீயை அணைக்க தண்ணீரை ஊற்றியிருக்கிறார். இந்த விபத்தின் போது நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆந்திரா : அனந்தபுரம் மாவட்டம் கசாபுரம் பகுதியில் புதியதாக வாங்கிய புல்லட்டை நீண்ட தூரம் இயக்கி
— DON Updates (@DonUpdates_in) April 3, 2022
கோவிலில் பூஜை போட நிறுத்திய போது பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது pic.twitter.com/Ownhtoul25
பின்னர், போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், புல்லட் வாகனம் தீப்பிடித்து எரிந்ததன் காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆங்காங்கே வழியில் நிறுத்தி பயணத்தை தொடரலாம் எனவும் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
newstm.in

