பரபரப்பு! திமுக பிரமுகர் வெட்டிக் கொலை!!
பரபரப்பு! திமுக பிரமுகர் வெட்டிக் கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நேற்றிரவு திமுக நிர்வாகி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பன்விளை பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் குமார் சங்கர், திமுக கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், இரவு 8 மணி அளவில் பணிமுடிந்து குமார்சங்கர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் நின்றிருந்த ஒருவர், குமார்சங்கரிடம் மது கிடைக்குமா? என கேட்டுள்ளார்.
அப்போது, இங்கு கிடைக்காது என கூறி அந்த நபரை கிளம்புமாறு கூறிய குமார் சங்கர், சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.சிறிது தூரம் சென்றபோது சாலையின் இருபுறமும் மறைந்திருந்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் குமார்சங்கரை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் சங்கர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா, அல்லது வேறு காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

