Theme Check

பரபரப்பு! அதிமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!!

பரபரப்பு! அதிமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!!

பரபரப்பு! அதிமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!!
X

ஈரோடு அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சி முத்துக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜன்- விஜயலட்சுமி தம்பதி வீட்டில் தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகரான சுந்தர்ராஜனுக்கு சொந்தமான பண்ணை வீடு அதே பகுதியில் உள்ளது. மர்ம நபர்கள் அந்த வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், வீட்டின் கதவு பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

admk bomb

பண்ணை வீட்டில் பணியாற்றி வரும் ஆறுமுகம், இதுகுறித்து சுந்தர்ராஜனுக்கு தெரிவித்தார். இதையடுத்து, அவர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

மோப்ப நாய் உதவியுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டு வீச்சுக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறார்கள்.

newstm.in

Next Story
Share it