Theme Check

பரபரப்பு! கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ்!?

பரபரப்பு! கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ்!?

பரபரப்பு! கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ்!?
X

மாஸ்க் அணியவில்லை எனக்கூறி சென்னையில் போலீஸார் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கி அவரது முகத்தில் சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22) தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார்.

இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு கூறினர்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

night-curfew 1

காவல்நிலையத்தில் போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் அளித்துள்ள புகார் மனுவில், சம்பவத்தின்போது தான் முகக்கவசம் அணிந்து வந்ததாகவும் எனினும் அபராதம் கட்ட போலீசார் வற்புறுத்தியதாகவும் தனது வேலைஅடையாள அட்டையை காண்பித்தும் விடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

night-curfew 1

பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் தனது முகத்தில் சிறுநீர் கழித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவர் அப்துர் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் தாக்கி,முகத்தில் சிறுநீர்கழித்து ரவுடித்தனம் என குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Next Story
Share it