Theme Check

பரபரப்பு! சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக்கில் திடீர் தீ!!

பரபரப்பு! சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக்கில் திடீர் தீ!!

பரபரப்பு! சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக்கில் திடீர் தீ!!
X

சென்னை அபிராமபுரத்தில் சாலையில் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தைவெளி பகுதியை சேர்ந்த அருண் ராமலிங்கம் (24) என்பவர் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக். இந்நிலையில் இவர் தியாகராய நகரில் இருந்து பழுது பார்ப்பதற்காக பல்சர் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

இரவு 8.15 மணியளவில் அபிராமபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து புகை வர ஆரம்பித்தது. அருண் ராமலிங்கம், தான் ஓட்டிக் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தும் பொழுது திடீரென தீப்பற்றியது.

bike fire 2

பின்னர் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கொண்டு தீயை அணைக்க முயன்றார். இருந்தும் தீ இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென பரவியது. அப்பொழுது மெக்கானிக் அருண் ராமலிங்கத்திற்கு கைகளில் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தைவெளி தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it