பரபரப்பு! பறவை மோதியதால் நடுவானில் தீப்பிடித்த விமானம்!!
பரபரப்பு! பறவை மோதியதால் நடுவானில் தீப்பிடித்த விமானம்!!

பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தின் மீது பறவை மோதியால் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா விமான நிலையத்திலிருந்து 185 பயணிகளுடன் டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென தீ பிடித்தது.
இதைக் கவனித்த விமான ஓட்டுனர் உடனே விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். பிறகு பாட்னா விமான நிலையத்திலேயே மீண்டும் விமானம் தரையிறங்கியது. இதையடுத்து 185 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.
#WATCH Patna-Delhi SpiceJet flight safely lands at Patna airport after catching fire mid-air, all 185 passengers safe#Bihar pic.twitter.com/vpnoXXxv3m
— ANI (@ANI) June 19, 2022
இந்த விமானத்தில் தீ பிடித்தது குறித்து விசாரணை செய்தபோது, நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, பறவை வந்து மோதியதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
விமானத்தில் தீ பற்றியதை உள்ளூர் வாசிகள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பிறகு உடனே விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் புகையுடன் தரையிறங்குவதைப் பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in

