மீண்டும் பரபரப்பு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து ஒருவர் பலி !
மீண்டும் பரபரப்பு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து ஒருவர் பலி !

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில், இருநாட்களுக்கு முன்பு இரவில் வழக்கம்போல பேட்டரியை சார்ஜ் செய்துள்ளார்.
ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதில் பிரகாஷின் அப்பா ராமசாமி பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும், ராமசாமியின் மனைவி கமலம்மா, மகன் பிரகாஷ், மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்று காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பான புகாரில், “பியூர் EV” என்ற உற்பத்தியாளர் மீது அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பியூர் EV தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருந்தங்களை தெரிவிக்கிறோம். பயனரின் தரவுத்தளத்தில் இந்த வாகனம் அல்லது சேவையை விற்பனை செய்ததற்கான எந்தப் பதிவேடும் இல்லை. வாகனம் செகண்ட் ஹேண்ட் விற்பனை மூலம் வாங்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்து வருகிறோம், என்று தெரிவித்துள்ளது.
newstm.in

