Theme Check

பரபரப்பு.. பிரபல மாடல் அழகி தற்கொலை.. கணவரிடம் போலீசார் விசாரணை..!

பரபரப்பு.. பிரபல மாடல் அழகி தற்கொலை.. கணவரிடம் போலீசார் விசாரணை..!

பரபரப்பு.. பிரபல மாடல் அழகி தற்கொலை.. கணவரிடம் போலீசார் விசாரணை..!
X

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷகானா. பிரபல மாடல் அழகியான இவர் திரைப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள்ளார்.

ஷகானா, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று கோழிக்கோட்டில் உள்ள கணவர் வீட்டில் ஷகானா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ஷகானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதால், சந்தேகத்தின் பேரில் ஷகானாவின் கணவர் ஷாஜத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஷாஜத் அடிக்கடி தன் மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாகவும் , இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷகானாவின் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் பிரபல மாடல் அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it