Theme Check

திண்டுக்கல்லில் பரபரப்பு..!! பாஜக பிரமுகரால் தற்கொலைக்கு முயன்ற பெண்!!

திண்டுக்கல்லில் பரபரப்பு..!! பாஜக பிரமுகரால் தற்கொலைக்கு முயன்ற பெண்!!

திண்டுக்கல்லில் பரபரப்பு..!! பாஜக பிரமுகரால் தற்கொலைக்கு முயன்ற பெண்!!
X

பாஜக பிரமுகர் கொடுத்த டார்ச்சரால் கணவனை இழந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரைச் சேர்ந்த மனிஷா (25), குமரேசன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு குமரேசன் படுகொலை செய்யப்பட்டார். இதனால், மனிஷா தனது தாய், தங்கையுடன் வசித்து வருகிறார்.

man-attempts-suicide

இந்த நிலையில் சோலைஹால் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளரான இவர், தான் குமரேசனின் சகோதரர் எனக்கூறி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழலில், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த 2 ஆண்டுகளாக மனிஷாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த மனிஷா, அவரது திருமண ஆசைக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனிடையே, தினேஷ்குமார் தன்னுடைய கட்சி பலத்தை பயன்படுத்தி மனிஷா குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததோடு, குடும்பத்தினரை மிரட்டியும் வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அவரது சகோதரி, மனிஷாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

dindugul

இந்நிலையில், எனது சகோதரியை கட்டாய திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்து வரும் தினேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சகோதரி சீமாதேவி வலியுறுத்தியுள்ளார்.

Next Story
Share it