Theme Check

புதுக்கோட்டையில் பரபரப்பு..!! பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய்!!

புதுக்கோட்டையில் பரபரப்பு..!! பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய்!!

புதுக்கோட்டையில் பரபரப்பு..!! பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய்!!
X

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பொன்னடைக்கண் (28), பொள்ளாச்சியில் உள்ள தேங்காய் உரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த சின்னுப்பிள்ளை என்பவரது மகள் பஞ்சவர்ணம் (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஜெகதீசன் என்ற ஆண்குழந்தையும் தக்‌ஷியா என்ற 8 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் பஞ்சவர்ணம் மற்றும் அவரது கணவர் பொன்னடைக்கணுக்கும் இடையே அவ்வப்போது குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாயார் வீட்டில் கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்னை குறித்து சமரசமாக பேசிவிட்டு கருப்பர்கோவில்பட்டிக்கு சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பஞ்சவர்ணம் திடீரென கணவனின் குடி பழக்கத்தால் ஏற்படும் குடும்ப பிரச்னையை நினைத்து மன விரக்தியில் தனது 2 குழந்தைகளையும் ஒன்றின் பின் ஒன்றாக கழுத்தை நெரித்து கொடூரமான கொலை செய்துவிட்டு, கொலை செய்த தகவலை தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்பு, பஞ்சவர்ணமும் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டை விட்டு கிளம்பிய நிலையில், பஞ்சவர்ணத்தின் தாயார் சின்னுபிள்ளை உடனடியாக அங்கு வந்து பார்த்தபோது 2 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தான் பெற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றதாக பஞ்சவர்ணம் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பஞ்சவர்ணத்தை கைது செய்து அவரது கணவர் பொன்னடைக்கணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it