Theme Check

ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு..!! நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து!!

ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு..!! நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து!!

ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு..!! நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து!!
X

சென்னை குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று பேருந்தின் முன்பக்கம் தீ பிடிக்க ஆரம்பித்தது. தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும் அதிலிருந்த ஓட்டுநர் நீலகண்டன் கீழே இறங்கி ஓட ஆரம்பித்து விட்டார்.

omnibus

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஸ்ரீபெரும்புதூர் இருங்காடு கோட்டையை சேர்ந்த தீயணைப்புத் துறையினர், தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்து எரிந்த பேருந்தில், பயணிகள் யாரும் இல்லாததால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

பேருந்தில் புகை வருவது உணர்ந்த ஓட்டுனரும் துரிதமாக தப்பித்த நிலையில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

omnibus

பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பேருந்தை அருகே பொதுமக்கள் யாரும் செல்லாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுச்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story
Share it