Theme Check

விருதுநகரில் பரபரப்பு..!! 20 வயதே ஆன கர்ப்பிணி பெண் தற்கொலை!!

விருதுநகரில் பரபரப்பு..!! 20 வயதே ஆன கர்ப்பிணி பெண் தற்கொலை!!

விருதுநகரில் பரபரப்பு..!! 20 வயதே ஆன கர்ப்பிணி பெண் தற்கொலை!!
X

கார்த்திகைபட்டி கிரமத்தைச் சேர்ந்தவர் மதி. இவரது மகன் கருப்பசாமி. 21 வயதான இவர் கட்டிட வேலை செய்து வந்த இவருக்கும் தென்காசி மாவட்டம் சிவகிரி கருங்குளம் தெருவைச் சேர்ந்த துர்காதேவி (20) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில், 2 மாத கர்ப்பிணியான துர்காதேவிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவகிரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

Poison

இந்நிலையில் துர்காதேவிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால், மன வேதனையடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்களின் பரிந்துரைபடி, அவரை மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையிலும் அதன்பிறகு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்காதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

dead-body

இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான மூன்று மாதத்திற்குள் துர்காதேவி இறந்ததால் நெல்லை கோட்டாட்சித் தலைவர் சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story
Share it