Theme Check

கோர்ட்டில் பரபரப்பு.. விசாரணையின்போது மர்மப்பொருள் வெடித்துச் சிதறியது..!

கோர்ட்டில் பரபரப்பு.. விசாரணையின்போது மர்மப்பொருள் வெடித்துச் சிதறியது..!

கோர்ட்டில் பரபரப்பு.. விசாரணையின்போது மர்மப்பொருள் வெடித்துச் சிதறியது..!
X

தலைநகர் டில்லியில் உள்ள ரோகிணி கோர்ட் வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் மர்மப்பொருள் வெடித்துச் சிதறியது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த மர்மப்பொருள் வெடித்து சிதறியுள்ளது.

இந்த விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த வெடிவிபத்தை தொடர்ந்து கோர்ட் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கோர்ட் வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

Bomb blast in Delhi's Rohini court, premises vacated, forensic team  investigation continues - Evening News
கோர்ட் அறை 102-ல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த லேப்டாப் வைக்கும் பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்துள்ளது.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மர்மப்பொருள் வைக்கப்பட்டிருந்த அந்த லேப்டாப் பையில் இருந்து வயர்கள் மற்றும் சில கருப்பு பாகங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதனால், இந்த வெடிவிபத்து என்பது வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story
Share it