பரபரப்பு.. பெற்ற தாயை பெட்ரோலை ஊற்றி எரித்த பாசக்கார மகன்..!
பரபரப்பு.. பெற்ற தாயை பெட்ரோலை ஊற்றி எரித்த பாசக்கார மகன்..!

திருவண்ணாமலை மாவட்டம், அக்காரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவரது கணவர் இறந்துவிட்டார். ஜெயாவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஜயகுமாருக்கு மட்டும் திருமணமாகவில்லை. மற்ற இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். விஜயகுமார் தாயுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களாக விஜயகுமார், சொத்துக்களை பிரித்துக் கேட்டு தாய் ஜெயாவை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும், குடிப்பதற்கு பணம் கேட்டு தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று சொத்தில் பாகப்பிரிவினைக்குப் பதிலாக பணம் கொடுக்குமாறு கேட்டு ஜெயாவிடம் சண்டை போட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் அலறித்துடித்த ஜெயாவை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து இளைய மகன் பூபாலன் கொடுத்த புகாரின் பேரில், ஆரணி போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காக, பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

