பரபரப்பு.. திமுக அலுவலக திறப்பு விழாவில் பெண் எம்பியின் ஐபோன் அபேஸ்..!
பரபரப்பு.. திமுக அலுவலக திறப்பு விழாவில் பெண் எம்பியின் ஐபோன் அபேஸ்..!

டெல்லியில் நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலை உயர்ந்த ஐபோன் திருடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் திறப்பு விழா இன்று மாலை திறக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்ட திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலை உயர்ந்த ஐபோன் திருடப்பட்டுள்ளது.
திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் ஐபோன் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

