ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் பல இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிலிண்டர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு ரயில்வேத் துறையின் உதவியை மகாராஷ்டிரா, , மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் நாடியுள்ளன.

அதன்படி திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களை எடுத்து வருவதற்காக சரக்கு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்திருந்தன.‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இன்று முதல் தங்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளன . ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் நாட்டின் எந்த பகுதியில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
newstm.in

