Theme Check

ஞாயிறு முழு ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் நாளை ஆலோசனை..!

ஞாயிறு முழு ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் நாளை ஆலோசனை..!

ஞாயிறு முழு ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் நாளை ஆலோசனை..!
X

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது, வரும் 31-ம் தேதிக்கு பின் இரவு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை காலை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது, வரும் 31-ம் தேதிக்கு பின்னர் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை காலை அதிகாரிகரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Next Story
Share it