Theme Check

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பதவிக்காலம் நீட்டிப்பு..!

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பதவிக்காலம் நீட்டிப்பு..!

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பதவிக்காலம் நீட்டிப்பு..!
X

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருபவர் புஷ்பா கனேடிவாலா. ஆடைக்கு மேல் தீண்டுவது பாலுறவு அத்துமீறல் அல்ல என்று கூறி, சிறுமியிடம் அத்துமீறியவனை போக்சோ வழக்கில் இருந்து இவர் விடுவித்தது பெரும் சர்ச்சையானது.

மேலும் 2 போக்சோ வழக்குகளிலும் நீதிபதி புஷ்பா வழங்கிய தீர்ப்புகள், பொதுமக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாகின. இதையடுத்து அவரை, நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப்பெற்றது.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், புஷ்பா மேலும் ஓராண்டுக்கு கூடுதல் நீதிபதியாகவே பணிநீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it