Theme Check

கண் கலங்கிய ஓபிஎஸ்... கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா!

கண் கலங்கிய ஓபிஎஸ்... கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா!

கண் கலங்கிய ஓபிஎஸ்... கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா!
X

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22-ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரின் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.சட்டசபையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

Sasikala-OPS

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைக்கு சசிகலா நேரில் வருகை தந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்ற சசிகலா கண்கலங்கிய ஓ.பன்னீர் செல்வத்த்தை சசிகலா கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகளை கூறினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனை வந்த சசிகலா ஓபிஎஸ் கையைப்பிடித்து ஆறுதல் கூறினார்.

Tags:
Next Story
Share it