முகநூல் காதலால் விபரீதம்..!! மணப்பெண்ணாக மாறிய ஆண்..!!
முகநூல் காதலால் விபரீதம்..!! மணப்பெண்ணாக மாறிய ஆண்..!!

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மனிதர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த பேஸ்புக் பல மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இதில், பல காதல்கள் அரங்கேறுவதுடன், சில காதல்கள் திருமணம் வரை செல்வது உண்டு. மேலும், பெண்கள் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து மோசடியில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் அம்மையில் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் பர்கானாஸ் பகுதியில் வசித்து வருபவர் அலோக் குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மேக்னா மண்டல் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, மேக்னாவை திருமணம் செய்ய அலோக் குமார் முடிவு செய்து வீட்டு சம்மதத்தையும் பெற்றுவிட்டார்.

இதையடுத்து கடந்த 24-ம் தேதி மேக்னாவை, காசியாவில் இருக்கும் தன் தாய்மாமா வீட்டுக்கு அழைத்து சென்ற அலோக், அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு அடுத்ததாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், சுஜாதா மண்டல் என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் மேக்னாவை அடையாளம் கண்டுகொண்டு மேக்னாவை மேக்னாட் என அழைத்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த மணமகன் சுஜாதா மண்டலிடம் இது குறித்து விசாரித்து உள்ளார். அதற்கு மேக்னா பெண் இல்லை, ஒரு ஆண் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இதனால் கோபமடைந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மேக்னாவிடம் இதுகுறித்து விசாரித்தனர். அதற்கு அவர் பெண் இல்லை ஆண் என்பதும் இதுபோல் பல ஆண்களை அவர் ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கோபத்தில் இருந்த மணமகன் குடும்பத்தினர், மேக்னாட்டின் முடியை வெட்டி ஆண்களுக்கான ஆடைகளை அணிய செய்து கடுமையாக தாக்கி உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேக்னாட்டை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

