Theme Check

தங்க ரேசரில் முகசவரம்! அசத்தும் முடிதிருத்தும் தொழிலாளி!

தங்க ரேசரில் முகசவரம்! அசத்தும் முடிதிருத்தும் தொழிலாளி!

தங்க ரேசரில் முகசவரம்! அசத்தும் முடிதிருத்தும் தொழிலாளி!
X

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் அவிநாஷ். இவர் அப்பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்துவதற்காக தனது கடையில் புதிய முயற்சி ஒன்றை செய்து காட்டியிருக்கிறார் அவிநாஷ்.

சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தைக் கொண்டு, நகைக்கடையில் புதிதாக தங்க ரேசர் ஒன்றை செய்துள்ளார் அவிநாஷ். இந்த தங்க ரேசரைக் கொண்டு தான், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஷேவிங் செய்து வருகிறார்.

தங்கத்தினாலான ரேசரில் சேவிங் செய்து கொள்ள வாடிக்கையாளர்களும் அதிகளவில் ஆர்வம் காட்டத் துவங்கிய நிலையில், அவிநாஷ் தங்க ரேசர் கொண்டு முகசவரம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நிறைய வாடிக்கையாளர்கள் தனது கடைக்கு முகசவரம் செய்து கொள்ள வருவதால், தன்னுடைய வருமானமும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக அவிநாஷ் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it