#Fact Check: மாஸ்க் அணிவது ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்துமா? - உண்மை என்ன?

#Fact Check: மாஸ்க் அணிவது ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்துமா? - உண்மை என்ன?

#Fact Check: மாஸ்க் அணிவது ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்துமா? - உண்மை என்ன?
X

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனையொட்டி ஏராளமான தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதுபோன்ற தவறான தகவல்கள் சாமானியர்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கிறது. முகக்கவசங்களின் நீண்டகால பயன்பாடு உடலில் ஆக்ஸிஜன் குறைபாட்டினை ஏற்படுத்துமா என்பதே தற்போது பிரதானமாக உள்ளது.

அதாவது முகக்கவசம் அணிவதால் உடலில் ஆக்சிஜன் குறைப்பாடு ஏற்படும் என்ற இதுபோன்ற ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வெளியேற்றப்பட்ட காற்றை மீண்டும் மீண்டும் சுவாசிப்பதால் இது நிகழலாம், இது கார்பன் டை ஆக்சைடாக மாறி நமக்கு மயக்கம் ஏற்படுகிறது என்ற தகவல் பரவி குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இணையத்தில் பரவும் இதுபோன்ற தகவல்களுக்கு எவ்வித அடிப்படை ஆதராமும் இல்லையென்று கூறப்படுகிறது. மாஸ்க்கை நீண்ட காலத்திற்கு கூட பயன்படுத்துவதால், உடலில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படாது. மாஸ்க் ஒரு நபரின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், முகமூடியை சரியாக அணிந்துகொள்வதன் மூலமும், சமூக இடைவெளியை பராமரிப்பதன் மூலமும், தவறாமல் கைகளை கழுவுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உதவும் ஒரு வழியாகும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் இந்த உண்மையைச் சரிபார்க்கும் நடவடிக்கையை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. அதன் நோக்கம், பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பது என்று அது கூறியது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பற்றி அரசாங்கம் மக்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், நம்பகமான ஆதாரங்களை மட்டுமே நம்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it