Theme Check

ரேஷன் கடைகளில் இதை செய்யாவிட்டால்.. உணவுத் துறை கடும் எச்சரிக்கை..!

ரேஷன் கடைகளில் இதை செய்யாவிட்டால்.. உணவுத் துறை கடும் எச்சரிக்கை..!

ரேஷன் கடைகளில் இதை செய்யாவிட்டால்.. உணவுத் துறை கடும் எச்சரிக்கை..!
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் சில பொருட்களை எடுத்து விட்டு வழங்குவதாக புகார்கள் எழுந்தது. இதற்கு, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்க அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்களின் பெயர், எண்ணிக்கை, எடை போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை ஒட்டுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பலர் அதை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு விவரம் குறித்த பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டு இருப்பதை ஆய்வு செய்து உறுதி செய்யுமாறு, மாவட்ட வழங்கல், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர், துணை, சார் - பதிவாளர்களுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறை தெரிவித்துள்ளது. பட்டியல் இல்லாத கடைகளின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it