Theme Check

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் சிறை தண்டனை! நாட்டு மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை !!

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் சிறை தண்டனை! நாட்டு மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை !!

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் சிறை தண்டனை! நாட்டு மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை !!
X

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் 2ஆவது அலை தற்போது ஓய்ந்து வருகிறது. எனினும் அடுத்து டெல்டா வகை கொரோனா வைரஸ் சுமார் 9 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் சில நாடுகளில் சோதனை நடத்தப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரப்படி 1,364,239 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 23,749 இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பரவாமல் இருக்க தடுப்பூசி போடும் பணியை அந்நாட்டு அரசு துரிதப்படுததியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 7 கோடி பேருக்குத் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இதுவரை அங்கு 21 லட்சம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அந்நாட்டுப் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே அந்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டுக்கு பேரழிவு தரும். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர் கைது செய்யப்படுவார்கள். தடுப்பூசி போடாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் நீங்கள் இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு செல்லுங்கள். நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. அரசின் ஆலோசனையைப் பொருட்படுத்த மக்கள் மறுப்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது. கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். வைரஸைக் கட்டுப்படுத்த நாம் மூன்று மடங்கு முயற்சிக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it